வானமும் பூமியும் படைத்தவரே

வானமும் பூமியும் படைத்தவரே

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண.......

 

 

 

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   வானமும் பூமியும் படைத்தவரே

                   வல்ல தேவனே எனதரசே

                        எந்தன் ஒத்தாசை பர்வதமே

                        எந்தன் கண்களை ஏறெடுப்பேன்

 

1.         மலைகள் பெயர்ந்து மாறிடினும்

            நிலைகள் தகர்ந்து போயிடினும்

            மாறாத உந்தன் கிருபையாலே

            ஆறுதல் எனக்கு அளித்தவரே

 

2.         என்னை காப்பவர் உறங்காரே

            எந்தன் தேவன் துணையாவார்

            எல்லா தீங்கும் காப்பாரே

            சேதங்கள் ஒன்றும் அணுகாதே

 

3.         வலப்பக்கம் எந்தன் நிழல் நீரே

            வழுவா காத்திடும் கன்மலையே

            அற்புத அதிசயம் செய்பவரே

            என்றும் எந்தன் துணை நீரே

 

4.         எந்தன் புகலிடம் நீர் தானே

            அஞ்சிடும் நேரம் அணைப்பவரே

            பயங்கள் யாவும் அகற்றினீரே

            பாரில் எந்தன் துணை நீரே

 

5.         அடைக்கலம் எனக்கு நீர் தானே

            கோட்டை மதிலாய் நிற்பவரே

            ஆயுதம் ஒன்றும் வாய்க்காதே

            எந்த நேரமும் ஜெயம்தானே

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே