உன்னில் பழுது ஒன்றுமில்லை
உன்னில்
பழுது ஒன்றுமில்லை
நீ தான் பூரண
ரூபவதி - 2
என் இருதயத்தை
கவர்ந்து கொண்டவளே
கவர்ந்து கொண்டவளே
- 2
நீ என் மணவாளி,
உன் ஆத்ம நேசர்
நான் தானே - உம்மில்
1. மாரிகாலம்
சென்றது மழையும்
பெய்து ஓய்ந்தது
பூமியிலே
புஷ்பங்கள்
பூத்து குலுங்குது-(2)
குருவிகள்
பாடும் காலம் வந்ததே
காட்டு
புறாவின் சத்தம்
கேட்குதே (2)
என் பிரியமே நீ
ரூபவதி எழுந்து
வா (2) - உம்மில்
2. திங்கள்
போன்ற அழகும் ஞாயிறு
போன்ற ஒளியும்
கொடிகளுடன்
படைகளை போல வருபவளும்
அடைத்து
வைத்த தோட்டமும்
நீ தான்
மறைவு
கட்டிய நீரூற்றும்
நீ தான் (2)
என் பிரியமே நீ
ரூபவதி திரும்பி
வா(2) - உம்மில்
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment