27 May 2021

காட்டுப் புறாவின் இதயமே என்

காட்டுப் புறாவின் இதயமே என்

 

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                   காட்டுப் புறாவின் இதயமே

                   என் ஆசை நேசருக்கே

                        ஆத்துமாக்களுக்காய் நான் கதறி அழுதிட

                        ஓர் இதயம் தாருமே உம் இதயத்தை தாருமே

 

1.         காயம் பட்ட இதயம்

            கல்வாரி நாயகா உம் இதயம் (2)

            காயங்களோ உம் இதயத்தை

            நீர் எனக்கு தந்தீரே

            உம் இதயத்தை தந்தீரே எனக்கு தந்தீரே... 2

 

2.         சித்தம் செய்யும் இதயம்

            இயேசு ராஜனின் இதயம் (2)

            பிதாவின் சித்தம் செய்திட

            நீர் எனக்கு தந்தீரே

            உம் இதயத்தை தந்தீரே எனக்கு தந்தீரே

 

3.         மனது உருகும் இதயம்

            மாசற்ற தேவா உம் இதயம் (2)

            பரிந்து பேசி நான் ஜெபித்திட

            நீர் எனக்கு தந்தீரே

            உம் இதயத்தை தந்தீரே எனக்கு தந்தீரே

 

4.         அன்பு சொரியும் இதயம்

            அருள் நாதர் இயேசுவின் இதயம் (2)

            அன்போடு நானும் உழைத்திட

            நீர் எனக்கு தந்தீரே

            உம் இதயத்தை தந்தீரே எனக்கு தந்தீரே

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...