கேரூபீன்கள் மத்தியில் வாழ்ந்திடும்

கேரூபீன்கள் மத்தியில் வாழ்ந்திடும்

 

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

                    கேரூபீன்கள் மத்தியில் வாழ்ந்திடும்

                        எங்கள் நல்ல துணையாளரே

                        சேராபீன்கள் எந்நாளும் பாடிடும்

                        இஸ்ரவேலின் பரிசுத்தர் நீரே

                        பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே உம்மை

                        எந்நாளும் ஓயாமல் பாடிடுவோம்

 

1.         எங்கள் பாவம் சாபங்கள் யாவையும்

            சிலுவையில் சுமந்த இரட்சகரே

            காணாமல் போன ஆட்டை அழைத்து

            மீட்டிடும் எங்கள் நல் மேய்ப்பரே

 

2.         ஏழு சபைகளின் மத்தியில் உலாவிடும்

            தாவீதின் விடிவெள்ளி நட்சத்திரமே

            மரணம் பாதாளம் யாவையும் ஜெயித்த

            தீறவு கோள்களை உடையவரே

 

3.         மறைவான மன்னாவை எனக்கு தந்து என்

            நெற்றியில் புது நாமம் தரிப்பவரே

            பிரகாச வெண்கல பாதங்கள் கொண்ட

            மகிமையின் தேவ குமாரரே

 

4.         வலக்கரம் ஏழு நட்சத்திரம் ஏந்தி

            மகிமையாய் உலாவிடும் மன்னவரே

            மரித்தீர் ஆனாலும் எந்நாளும் வாழ்ந்திடும்

            அல்பாவும் ஒமேகாவும் ஆனவரே

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு