06 May 2021

கதிரவன் எழுகின்ற காலையில்

கதிரவன் எழுகின்ற காலையில்-

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

24. இராகம்: பூபாளம்                                      சாப்புதாளம்

 

கண்ணிகள்

 

1.       கதிரவன் எழுகின்ற காலையில் இறைவனைத்

            துதி செய்ய மனமே-எழுந்திராய்.

 

2.         வறண்டு தண்ணீரற்ற வனம் இந்தப் புவிதனில்

            திரண்ட தயை தேவை-நாடுவேன்.

 

3.         கடவுளின் வல்லமை, கன மகிமை காணும்

            இடமதில் செல்வதே-என் இஷ்டம்.

 

4.         ஜீவனைப் பார்க்கிலும் தேவனின் காதலை

            ஆவலாய் நாடி நான்-போற்றுவேன்.

 

5.         ஆயுள் பரியந்தம் ஆண்டவர் நாமத்தை

            நேயமாய்ப் பாடி நான்-உயர்த்துவேன்.

 

6.         மெத்தையில் ராச்சாமம் நித்திரை கொள்கையில்

            கர்த்தரின் செயல்களைச்-சிந்திப்பேன்.

 

7.         அல்லும் பகலும் நான் அவர் செட்டைகளின் கீழ்

            தொல்லைக்கு நீங்கியே-ஒதுங்குவேன்.

 

8.         ஆத்துமம் தேவனை அண்டிக் கொள்ள அவர்

            நேத்திரம்[1] போல் என்னைக் காக்கிறார்.

 

- தீ. யோசேப்பு

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 



[1] கண்மணி

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...