09 July 2018

நம் தேவன் அன்புள்ளவர்


            நம் தேவன் அன்புள்ளவர், நம் தேவன் பரிசுத்தர்
            நம் தேவன் நீதிபரர், நமக்காக ஜீவன் தந்த இயேசு அவரே

1.         நன்மை ஏதும் ஒன்றும் நம்மில் இல்லையே
            என்ற போதும் நம்மை நேசித்தாரே
            ஆ அந்த அன்பில் மகிழ்வோம்
            அவரின் பாதம் பணிவோம் (2)  - நம்

2.         அத்திமரம் துளிர் விடாமற் போனாலும்
            திராட்சைச் செடி கனி கொடாமற் போனாலும்
            ஆ அவர் காயம் நோக்குவோம்
            அதுவே என்றும் போதுமே (2)    - நம்

3.         வானமீதில் இயேசு இறங்கி வருவார்
            தேவதுதர் போல மகிமை அடைவோம்
            ஆ எங்கள் தேவா வாருமே
            அழைத்து வானில் செல்லுமே (2)          - நம்

4.         அல்லேலுயா கீதம் நாம் என்றும் பாடுவோம்
            ஆண்டவரோடென்றும் நாம் ஆளுகை செய்வோம்
            ஆ அந்த நாள் நெருங்குதே
            நினைத்தால் நெஞ்சம் பொங்குதே (2)  - நம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...