27 July 2018

உந்தன் ஆவி எந்தன் உள்ளம் தங்க வேண்டும்


                        உந்தன் ஆவி எந்தன் உள்ளம் தங்க வேண்டும்
                        எந்த நாளும் உந்தன் நாமம் பாட வேண்டும்

1.         உள்ளமெல்லாம் அன்பினாலே
            பொங்க வேண்டும்
            கள்ளம் நீங்கி காலமெல்லாம்
            வாழ வேண்டும்                         - உந்தன்

2.         பாவமான சுபாவம்
            எல்லாம் நீங்க வேண்டும்
            தேவ ஆவி தேற்றி
            என்றும் நடத்த வேண்டும்         - உந்தன்

3.         ஜீவ தண்ணீர் நதியாகப்
            பாய வேண்டும்
            சிலுவை நிழலில் தேசமெல்லாம்
            வாழ வேண்டும்                         - உந்தன்

4.         வரங்கள் கனிகள் எல்லா நாளும்
            பெருக வேண்டும்
            வாழ் நாளெல்லாம் பணிசெய்து
            மடிய வேண்டும்                         - உந்தன்

5.         ஏதேன் தோட்ட உறவு என்றும்
            தொடர வேண்டும்
            இயேசுக் கிறிஸ்து குரலைக் கேட்டு
            மகிழ வேண்டும்                                    - உந்தன்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...