27 July 2018

மணவாளன் கர்த்தர் இயேசு வருகின்றாரே


                   மணவாளன் கர்த்தர் இயேசு வருகின்றாரே
                        மணவாட்டி சந்திக்க ஆயத்தம்தானா?
                        பிரியமே நீ ரூபவதி
                        எழுந்து வா உன் நேசரைச் சந்திக்கவே            - மணவாளன்

1.         குருவிகள் பாடும் சத்தம் எங்கும் கேட்குதே
            காட்டுப்புறா சப்தம் நம் தேசம் நிறையுதே
            அத்திமரம் காய்காய்க்க காலம் வந்ததே
            திராட்சைக்கொடி பூ பூத்து வாசம் பெருகுதே                - என் பிரியமே

2.         மாரிக் காலம் சென்றது மழையும் வந்தது
            பூமியிலே புஷ்பங்கள் பூத்துக் குலுங்குதே
            கன்மலையின் சிகரங்களில் தங்கும் புறாவே
            கர்த்தர் இயேசு வரும் நாளை சொல்லிப் பாடிடு             - என் பிரியமே

3.         சாரோனின் ரோஜாவாம் கர்த்தர் இயேசு
            பள்ளத்தாக்கின் லீலியாம் பரமன் இயேசு
            தாகம் தீர்க்கும் ஜீவ நதி கர்த்தர் இயேசு
            பாவம் போக்கும் பரிகாரி பரமன் இயேசு                         - என் பிரியமே

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...