இவன் பேர் யோனா சொல்லாமல் போனான்


            இவன் பேர் யோனா சொல்லாமல் போனான்
          தர்ஷீசுக்கும் கப்பல் ஏறினான்
            தேவ சித்தத்துக்கு விலகி ஓடினான்

                        தனிமையாக அவன் தூங்கப் போனான்
                        நினிவே தனை யோனா மறந்து போனான்
                        ஏலேலோ ஏலேலோ ஏலேலோ (4)

1.         போனானே போனானே அடித்தட்டில்
            அயர்ந்தே நித்திரை போனானே
            காணாமல் போனானே - கர்த்தரின்
            பார்வையில் கடந்து போனானே - தனி

2.         கடல் தனுக்கதிகாரியாம் - கர்த்தரோ
            காற்றுக்கு கட்டளையிட்டார்
            இடறலின் காரணமாம் யோனாவை
            எடுத்து கடலில் எறிந்தனர்                   - தனி

3.         சென்றானே சென்றானே - மீனின்
            வயிற்றுக்குள் சென்றானே
            வென்றானே விண்ணப்பம் செய்து
            வல்லவர் நல்ல கரை சேர்த்து விட்டாரே            - தனி

4.         நினிவேக்கு போனானே - யோனா
            கனிவில்லா மொழிகள் சொன்னானே
            தேசம் அழியும் என்றானே தேவனின்
            பாசம் மறந்து போனானே                       - தனி

5.         போனானே போனானே - யோனா
            ஏமாந்து போனானே
            மனம் மாறி போனாரே - நினிவே மக்கள்
            மன்னிப்பு பெற்றுக் கொண்டாரே             - தனி

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு