27 July 2018

இத்தனை பெரிய உலகம்


                   இத்தனை பெரிய உலகம்
                        இதனை படைத்திட்டது யார்
                        இயற்கையாக முடியுமா (3) - இந்த படைப்பு
                        சூரியன் (2) சந்திரன் (2) நட்சத்திரம் (2) - எத்தனை ஆச்சரியம்

1.         இயற்கை என்று சொல்லும் மாந்தரே
            சிந்திப்பீர் சில நிமிடமே (2)
            சூரியனை வானிலே ஓர் நாள் இரவிலே
            உம்மால் நிறுத்த முடியுமா - முயன்று பாருமே                - சூரியன்

2.         சந்திரனை எட்டிய போதும்
            பூமிக்கே நீ திரும்பியது ஏன்? (2)
            உன்னுடைய வாழ்க்கையை சந்திரனில் தொடங்கிட
            உன்னால் இன்று முடியுமா - முயன்று பாருமே                - சூரியன்

3.         நட்சத்திரத்தின் எண்ணிக்கையினை
            உன்னால் இன்று கூற முடியுமா? (2)
            சின்னஞ் சிறு நட்சத்திரம் ஒன்று கீழே விழுந்தால்
            உன் நிலைமை என்னவாகும் சிந்தித்துப் பாரும்           - சூரியன்

4.         காற்று கடலின் சீற்றம் காண்கின்றாய்
            அவற்றை உன்னாலா் அடக்க முடியுமா (2)
            அருமை நாதர் இயேசுவோ அவற்றை அன்று அடக்கினார்
            உன்னால் இன்று முடியுமோ - முயன்று பாருமே              - சூரியன்

2 comments:

  1. Bro. King Solomon - Original Song composer Tune and Lyrics

    ReplyDelete
    Replies
    1. சகோ. ராஜா சாலமோன் அவர்கள் பற்றிய மேலும் அதிகமான தகவல்கள் இருந்தால் பதிவு செய்யுங்கள். நன்றி!

      Delete

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...