27 July 2018

தேசமே பயப்படாதே


                        தேசமே பயப்படாதே
                        மகிழ்ந்து களிகூரு
                        மன்னவர் கர்த்தர் உந்தனுக்கே
                        மாபெரும் காரியம் செயதிடுவார்

1.         செழிப்பான புது வாழ்வு
            தேவனே அருளுவார்
            சுக வாழ்வு சமாதானம்
            சந்தோஷம் தந்திடுவார் (2)                  - தேசமே

2.         மலைபோல வருவதெல்லாம்
            பனிபோல் மறைந்திடுமே
            உன்னதரின் கிருபைகளும்
            உந்தனைச் சூழ்ந்திடுமே (2)                - தேசமே

3.         தேவனுடன் உறவுகொண்டு
            தினம் தினம் வாழந்திடுவாய்
            இம்மையிலும் மறுமையிலும்
            இன்பத்தை ருசித்திடுவாய் (2)             - தேசமே

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...