உன்னையே வெறுத்துவிட்டால்


1.       உன்னையே வெறுத்துவிட்டால்
            ஊழியம் செய்திடலாம்
            சுயத்தை சாகடித்தால்
            சுகமாய் வாழ்ந்திடலாம்

2.         சிலுவை சுமப்பதனால்
            சிந்தையே மாறிவிடும்
            நீடிய பொறுமை வரும்
            நிரந்தர அமைதி வரும்            - உன்னையே  

3.         பெயர் புகழ் எல்லாமே
            இயேசுவின் நாமத்திற்கே
            கிறிஸ்து வளரட்டுமே
            நமது மறையட்டுமே                  - உன்னையே

4.         நாளைய தினம் குறித்து
            கலங்காதே மகனே (மகளே)
            இதுவரை காத்த தெய்வம்
            இனியும் நடத்திடுவார்              - உன்னையே

5.         சேர்த்து வைக்காதே
            திருடன் பறித்திடுவான்
            கொடுத்திடு கர்த்தருக்கே
            குறைவின்றி காத்திடுவார்        - உன்னையே  

6.         தன்னலம் நோக்காமல்
            பிறர் நலம் தேடிடுவோம்
            இயேசுவில் இருந்த சிந்தை
            என்றுமே இருக்கட்டுமே            - உன்னையே

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு