27 July 2018

உன்னதத்தின் ஆவியே


                   உன்னதத்தின் ஆவியே
                        உந்தன் பக்தர் உள்ளத்தில்
                        ஊற்ற வேண்டும் இந்த நாளிலே
                        உலகமெங்கும் சாட்சி நாங்களே

சரணங்கள்

1.         பெந்தெகோஸ்தே பெருவிழாவிலே
            பெருமழைபோல் ஆவி ஊற்றினீர்
            துயரமான உலகிலே, சோர்ந்துபோகும் எங்களை
            தாங்க வேண்டும் உந்தன் ஆவியால்                 - உன்னத

2.         ஆவியின் கொடைகள் வேண்டுமே
            அயல் மொழியில் துதிக்க வேண்டுமே
            ஆற்றலோடு பேசவும், அன்புகொண்டு வாழவும்
            ஆவி ஊற்றும் அன்பு தெய்வமே                         - உன்னத

3.         ஜெப தூபம் எழுப்ப வேண்டுமே
            ஜெய தொனியும் முழங்க வேண்டுமே
            இந்தியாவில் எங்குமே, சிலுவை கொடி பறக்கவே
            கிரியை செய்யும் உந்தன் ஆவியால்                  - உன்னத

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...