ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியே
ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியே
ஜீவ
நதியே என்னில் பொங்கி பொங்கிவா - 2
ஆசீர்வதியும்
என் நேச கர்த்தரே
ஆவியின்
வரங்களினால் என்னை நிரப்பும்
சரணங்கள்
1. கன்மலையைப் பிளந்து வனாந்திரத்திலே
கர்த்தாவே
உம் ஜனங்களின் தாகம் தீர்த்தீரே
பள்ளத்தாக்கிலும் மலைகளிலும்
தண்ணீர்
பாயும் தேசத்தை நீர் வாக்களித்தீரே - ஊற்று
2. ஜீவத் தண்ணீராம் எந்தன் நல்ல கர்த்தரே
ஜீவ
ஊற்றினால் என்னை நிறைத்திடுவீர்
கனி
தந்திட நான் செழித்தோங்கிட
கர்த்தரின்
கரத்தில் நித்தம் கனம் பெற்றிட - ஊற்று
3. இரட்சிப்பின் ஊற்றுக்கள் எந்தன் சபைதனிலே
இரட்சகரின் காயங்களில் வெளிப்படுதே
ஆத்ம
பாரமும் பரிசுத்தமும்
ஆவலுடன்
பெற்றிடவே வரம் தாருமே - ஊற்று
4. திறக்கப்பட்டதாம் ஊற்று சிலுவையிலே
இரட்சகரின் காயங்கள் வெளிப்படுதே
பாவக் கறைகள் முற்றும் நீங்கிட
பரிசுத்த
சமூகத்தில் ஜெயம் பெற்றிட - ஊற்று
5. கிருபையின் ஊற்றுக்கள் பெருகிடவே
புதுபெலன் அடைந்து நான் மகிழ்ந்திடவே
பரிசுத்தத்தை பயத்துடனே
பூரணமாக்கிட தேவ பெலன் தாருமே - ஊற்று
- பெர்க்மான்ஸ்
Comments
Post a Comment