அருளுருவே, நரருருவாய் என்னிமித்தம்
1. அருளுருவே,
நரருருவாய் என்னிமித்தம்
இது தருணம் ஏன்வருத்தமாம் - என் தேசுவே
- ஐயா நீர்
அவஸ்தையுறக் காரணமேன், ஆதி மொழியாலோ
2. பொற்கிரீடம் அணி சிரசில் என்னிமித்தம் ஐயா
நீர்
போத நெருங்குண்டதேவை பொற்கொடி செய்வினையோ
3. அருள்கரங்கள் இரண்டிலேயும் என்னிமித்தம்
- ஐயா நீர்
ஆணியறையுண்ட தேவை அறுத்த கனி வினையோ
4. திரு விலாவில் ஈட்டியினால் என்னிமித்தம்
- ஐயா நீர்
திறக்க மனங்கொண்ட தேனோ, தேவனுரைதானோ
5. பங்கயப் பூ பாதந்தன்னில் என்னிமித்தம் - ஐயா
நீர்
படுகாய மானதாகி பகர்ந்த மொழியாலோ
6. சோரி சிந்தும் வேர்வையதால், என்னிமித்தம்
- ஐயா நீர்
சோரி சிந்தக் காரணமேன், தேவனுரைதானோ
7. துய்ய திருமேனியெல்லா என்னிமித்தம் - ஐயா
நீர்
சோரி வெள்ள மானதாகி சொன்ன மொழியாலே
8. வன்மையுடன், உடல் கிழிய, என்னிமித்தம் - ஐயா
நீர்
வாரடிகள் பட்டதேனோ, ஆதி மொழியாலோ
9. தேவனுமாய் மனுஷனுமாய் என்னிமித்தம் - ஐயா
நீர்
தேடி வந்த காரணமேன் தேவனுரைதானோ
10. ஆவியிலே வேதனையாய் என்னிமித்தம் ஐயா நீர்
அழுது கொஞ்சம் காரணமேன் ஆதி மொழியாலே
Comments
Post a Comment