27 July 2018

படகோ படகு கடலிலே படகு


                   படகோ படகு கடலிலே படகு
                        கர்த்தர் இயேசு இல்லா படகு
                        கவிழ்ந்து போகுது பாரு கதறுராங்க கேளு
                        காத்திடவோ யாருமில்லையோ

1.         நடு ராத்திரியில் நடுங்கும் குளிரிலே
            கடலோரத்திலே கூக்குரல் கேட்டே
            கடந்த வந்தாரே கர்த்தர் இவரே
            நடந்து வந்தார் நடுக்கடலில் நாலாம் ஜாமத்தில்

2.         வாலிபப் படகே உல்லாசப் படகே
            தன் பெலன் நம்பும் தன்னலப் படகே
            காலம் வருமுன் உன் கோலம் மாறுமே
            கர்த்தனையே தேடியே வருவாய் இன்றே

3.         குடிப்பழக்கத்தினால் குழம்பும் படகே
            குடும்பத்தையுமே அழிக்கும் படகே
            சடுதியினிலே நீ சாய்ந்து போவாயே
            அழைக்கும் அன்பர் இயேசுவையே நாடி வருவாயெ

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...