27 July 2018

உச்சித மோட்ச பட்டணம் போக


          உச்சித மோட்ச பட்டணம் போக
            ஓடி நடப்போமே- அங்கே
            உன்னத யேசு மன்னவருண்டு, ஓயா இன்பமுண்டு

1.         சித்திரச் சீயோன் பெற்றிடச் செல்லும்
            சேனையின் கூட்டமதாய் - எங்கள்
            ஜீவனினதிபர் யேசு நம்மகிபர்
            சீயோன் பதிமனுவேல்                                        - உச்சித

2.         அன்பினால் அழைப்பார், ஆறுதல் சொல்வார்
            அதிபதி யேசையர் - அங்கே
            இன்பங்களுண்டு; இயேசுவின் சமூகம்
            என்றென்றும் ஆறுதலே                         - உச்சித

3.         கீதங்களோடு இயேசுவைப் போற்றி
            கெம்பீரமாய் நடப்போம் - அங்கே
            கிளர் ஒளியுள்ள பட்டன ராஜன்
            கீதங்கள் நாம் அறைவோம்                              - உச்சித

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...