27 July 2018

எந்தன் உள்ளம் உண்மை வாழ்வை வாஞ்சிக்குதே


                   எந்தன் உள்ளம் உண்மை வாழ்வை வாஞ்சிக்குதே
                        நேர்மையான ஆட்சி காண துடிக்கின்றதே
                        என் மனம் முழு அமைதியை நாடுகின்றதே
                        என்தன் இயேசுவின் வழி நடக்க ஏங்குகின்றதே

                                    இயேசு ராஜா வாழ்க
                                    அவர் நாமம் வாழ்க
                                    அவர் ஆட்சி ஓங்குக
                                    அவர் மாட்சி தங்குக

1.         கொள்ளை கொலையுமில்லை ஊழல் வஞ்சகமுமில்லை
            நோயும் பேயுமில்லை, சாவு துக்கமில்லை
            தீயவன் செயல் கிளர்ச்சிகள் செய்வாரில்லை
            இயேசு ராஜன் ஆட்சியில் நன்மை குறைவதில்லை      - இயேசு

2.         உண்மை சிறந்திலங்கும் நீதி நிலைத்து நிற்கும்
            அன்பு உயர்ந்து ஓங்கும் இன்பம் வழிந்து ஓடும்
            எங்கும் ஒளி வீசிடும் ஓயா கீதம் கேட்டிடும்
            என்தன் இயேசு ஆட்சியில் சுக வாழ்வு நிலைக்கும்      - இயேசு

3.         பாதாள மரண சேனை முறித்திடுவார்
            கெர்ச்சிக்கும் சிங்கத்தின் வாயை மூடிடுவார்
            பாவ அழிவு நீக்கி எந்தன் இயேசு ராஜன்தான்
            வெற்றிக்கிரீடம் சூட்டி என்னை மோட்சம் சேர்ப்பாரே    - இயேசு

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...