27 July 2018

அன்பின் தேவன் ஏசு உன்னை அழைக்கிறார்

கன்:540

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                             பல்லவி

 

                   அன்பின் தேவன் ஏசு உன்னை அழைக்கிறார்

                        கல்வாரியின் மேட்டினில் கலங்கும் கர்த்தர் உண்டல்லோ

                        உன்னை எண்ணி உள்ளம் நொந்து

                        அணைக்க ஏசு துடிக்கிறார்

                        கவலையேன் கலக்கமேன் கர்த்தர் ஏசு அழைக்கிறார்

 

                             சரணங்கள்

 

1.         மனிதர்கள் அன்பு மாறலாம்

            மறைவாக தீது பேசலாம்

            அன்பு காணா இதயமே

            அன்பின் தேவனை அண்டிக்கொள் - அன்பின்

 

2.         வியாதிகள் தொல்லையோ தோல்வியோ

            வாழ்க்கையில் என்ன ஏக்கமோ

            கண்ணீர்தான் உந்தன் படுக்கையோ

            கலங்காதே மன்னன் ஏசு பார் - அன்பின்

 

3.         வேலை வசதிகள் இல்லையோ

            வீட்டினில் வறுமை தொல்லையோ

            மரண பயமும் நெருங்குதோ

            மரணம் வென்ற ஏசு பார் - அன்பின்

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...