பூவின் நற்கந்தம் வீசும் சோலையாயினும்
பூவின் நற்கந்தம் வீசும் சோலையாயினும்
நல்ல தண்ணீர் ஓடும் பள்ளத்தாக்கிலேயும்
யேசுநாதர் பின்சென்றேகி மோட்சம் நாடுவேன்
விண்ணில் சூடும் க்ரீடம் நோக்கி ஓடுவேன்.
பின் செல்வேனே மீட்பர் பின்செல்வேனே
எங்கேயும் எப்போதும் பின்னே செல்லுவேன்
பின் செல்வேனே மீட்பர் பின் செல்வேனே
யேசு காட்டும் பாதையெல்லாம் செல்லுவேன்
2. கார்மேகம் மேலேமூடும் பள்ளமெங்கிலும்
காற்றகோரமாக மோதும் ஸ்தானத்திலும்
யேசு பாதை காட்டச் சற்றும் அஞ்சவே மாட்டேன்
ரட்சகர் கை தாங்கத் தைரியம் கொள்ளுவேன் -
பின்
3. நாள்தோறும் யேசுநாதர் கிட்டிச் சேருவேன்
மேடானாலும் காடானாலும் பின்செல்லுவேன்
மீட்பர் என்னை மோசமின்றிச் சுகமே காப்பார்
விண்ணில் தாசரோடு சேர்ந்து வாழ்விப்பார் -
பின்
Comments
Post a Comment