27 July 2018

இன்பமிதே பேரின்பமிதே


பல்லவி

          இன்பமிதே பேரின்பமிதே
            இயேசு நாமம் இன்பமிதே
            இன்பமிதே நல் இன்பமிதே
            இயேசு நாமமே

சரணங்கள்

1.         பாவம் போக்க வந்த நாமம்
            இயேசு நாமமே
            வாதை போக்க வந்த நாமம்
            இயேசுவின் நாமமே                  - இன்பமிதே

2.         நேற்றும் இன்றும் மாறாத நாமம்
            இயேசு நாமமே
            தேனிலும் இனிய நாமம்
            இயேசுவின் நாமமே                  - இன்பமிதே

3.         ஜீவா பாதை காட்டும் நாமம்
            இயேசு நாமமே
            ஜீவன் பலன் தந்த நாமம்
            இயேசுவின் நாமமே                  - இன்பமிதே

4.         சாவு பயங்கள் நீக்கும் நாமம்
            இயேசு நாமமே
            சாபம் ரோகம் நீக்கும் நாமம்
            இயேசுவின் நாமமே                  - இன்பமிதே

5.         தேவ ராஜ்ஜியம் சேர்க்கும் நாமம்
            இயேசு நாமமே
            தேவ நீதி நிறைந்த நாமம்
            இயேசுவின் நாமமே                  - இன்பமிதே

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...