27 July 2018

கர்த்தருக்குக் காத்திருந்து


                   கர்த்தருக்குக் காத்திருந்து
                        கழுகுபோல் பெலனடைந்து
                        செட்டைகளை அடித்து
                        உயரே எழும்பிடுவாய்

            புதுபெலன் அடைந்திடுவாய் நீ (8)

1.         தாகமுள்ளன் மேல்
            ஆவியை ஊற்றிடுவார்
            வறண்ட நிலத்தின் மேல்
            தண்ணீரை ஊற்றிடுவார்                       - புது பெலன்

2.         சர்ப்பங்களையும் எடுப்பாய்
            தேள்களையும் மிதிப்பாய்
            சத்துருவின் அதிகாரம்
            சகலமும் மேற்கொள்வாய்                      - புது பெலன்

3.         சாத்தானின் கோட்டைகளை
            சத்தியத்தால் தகர்ப்பாய்
            சிலுவையை சுமந்திடுவாய்
            ஜெயக்கொடி ஏற்றிடுவாய்                      - புது பெலன்

4.         கர்த்தரில் பலனடையும்
            பாக்கியம் பெற்றிடுவோம்
            பெலத்தின் மேல் பெலனடைந்து
            சீயோனுக்கு வருவாய்                            - புது பெலன்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...