27 July 2018

அன்பின் குரல் உன்னை அழைக்கின்றது

கன்:537

To Download Txt Lyrics file

 

                   அன்பின் குரல் உன்னை அழைக்கின்றது

                        ஆறுதல் அளிக்க துடிக்கின்றது

                        நீ செய்த பாவம் சொல் அவர் சமுகம்

                        மனங்கசந்தழுதிரக்கம் பெறுவாய் - அன்பின்

 

                             சரணங்கள்

 

1.         துன்பமோ தொல்லையோ கடன் பாரமோ

            வியாதியோ வியாகுல வேதனையோ

            சோர்ந்திடாதே ஜீவ தேவனுண்டு

            அவர்தாம் ஆண்டவராம் இயேசு - அன்பின்

 

2.         உந்தனின் மீறுதல் பாராதவர்

            உந்தனக்கரமங்கள் எண்ணாதவர்

            உனக்காக ஜீவனைக் கொடுத்தவராம்

            இயேசு அழைக்கும் அன்பின் குரல் - அன்பின்

 

3.         பாவியான உன்னைத் தள்ளிடாமலா்

            பாவத்தை வெறுத்த பாவநாசர்

            பாவியாம் உன்னை மீட்டிடவே

            பாசமாய் அழைக்கும் அன்பின் குரல் - அன்பின்

 

4.         உன்னில் காணப்படும் சுயநீதி

            அதை அழித்தாலே வரும் தேவநீதி

            தன்னிடம் உன்னை சேர்த்துக்கொள்ள

            தயவாய் அழைத்திடும் அன்பின் குரல் - அன்பின்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...