வல்லமை அருள் நிறைவே வாரும்


                   வல்லமை அருள் நிறைவே வாரும்
                        பின்மாரி பொழிந்திடுமே
                        தேவ ஆவியே தாகம் தீருமே
                        வல்லமையால் இன்று எமை நிரப்பிடுமே

சரணங்கள்

1.         புது எண்ணெய் அபிஷேகம்
            புதுபெலன் அளித்திடுமே
            நவமொழியால் துதித்திடவே
            வல்லமை அளித்திடுமே                       - வல்லமை

2.         சத்திய ஆவியே நீர்
            நித்தமும் நடத்திடுமே
            முத்திரையாய் அபிஷேகியும்
            ஆவியின் அச்சாரமாய்                         - வல்லமை

3.         அக்கினி அபிஷேகம்
            நுகத்தினை முறித்திடுமே
            சத்துருவை ஜெயித்திடவே
            சத்துவம் அளித்திடுமே                                    - வல்லமை

4.         தூய நல் ஆவிதனை
            துக்கமும் படுத்தாமல்
            தூய வழி நடந்திடவே
            பெலன் தந்து காத்திடுமே                      - வல்லமை

5.         பெற்ற நல் ஆவிதனை
            காத்திட வரம் தாரும்
            ஆவியினால் நடந்திடவே
            ஆளுகை செய்திடும்                            - வல்லமை

6.         உலர்ந்திடும் எலும்புகளும்
            உயிர்பெற்று எழும்பிடவே
            எழுப்புதலை கண்டிடவே
            வல்லமை அளித்திடுமே                       - வல்லமை

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு