27 July 2018

அன்பு இயேசுவின் அன்பு - அது

கன்:533

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   அன்பு இயேசுவின் அன்பு - அது

                        அளவிட முடியாதது - நம்பு

                        இதை நீ நம்பு இந்த இகமதில் கிடைக்காதது

 

சரணங்கள்

 

1.         தாய் தந்தை அன்பொருநாள் - அது

            தணிந்தே போய்விடும்

            நல்ல பிள்ளைகள் அன்பொருநாள் - அது

            பிரிந்தே போய்விடும்

 

                        என்றென்றும் மாறாதது என் இயேசுவின்

                        தூய அன்பு

                        என் வாழ்வில் தீராதது என் தேவனின்

                        ஜீவ அன்பு

 

2.         நண்பனின் அன்பொரு நாள் - அது

            நலிந்தே போய்விடும்

            நீ நம்பினோர் அன்பொருநாள் - அது

            தணிந்தே போய்விடும்               - என்றென்றும்

 

3.         கணவனின் அன்பொருநாள் - அது

            கரைந்தே போய்விடும்

            நல்ல மனைவியின் அன்பொருநாள் - அது

            மறைந்தே போய்விடும்              - என்றென்றும்

 

4.         தேசத்தின் அன்பொருநாள் - அது

            தேய்ந்தே போய்விடும்

            நல்ல பாசத்தின் அன்பொருநாள் - அது

            பறந்தே போய்விடும்                   - என்றென்றும்

 

5.         உறவினர் அன்பொருநாள் - அது

            ஒழிந்தே போய்விடும்

            உடன் பிறந்தவர் அன்பொருநாள் - அது

            அழிந்தே போய்விடும்                - என்றென்றும்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...