ஐயோ என் செல்வச் சீராளச் சிகாமணியை


1.       ஐயோ என் செல்வச் சீராளச் சிகாமணியை
            சிலுவையில் மடியவிட்டு - ஓகோ
            கொடுமையாய் அடிமை நான் குவலய மீதினில்
            கூவென் றலறி நிற்கின்றேன்

2.         பாரிலுள்ள பெரியோர்களின் பெண்களும்
            பார்த்தெதிர் காத்திருந்தும் - ஓகோ
            பாவி வயிற்றினிலே பெருந்துன்ப மடைந்திடப்
            பரனே நீ வந்துதித்தாய்

3.         பெற்றதில்லையென்று பெண்கள் நகைத்தாலும்
            பேதை துயரில்லையோ - ஓகோ
            பெற்றதினால் மெத்த பெருந்துயர் வாதைகள்
            பெரிதாய் அடையலாச்சோ

4.         அன்று சம்மனசு கிருபை பெற்றவளென்றாள்
            இதுவோ கிருபை ஐயா - ஓகோ
            நன்று சிமியோனும் சொன்ன மொழிப்படி
            வந்து பலித்ததுவே

5.         மூன்றரை ஆண்டாக முக்கிய நன்மைகள்
            மிகப்பெற்ற யூதாசே - ஐயோ
            முப்பது வெள்ளிக்காய் முத்தமிட்டே பொல்லா
            மூர்க்கரைக் கூட்டி விட்டாய்

6.         ஐயோ பிலாத்துவே அநியாயத் தீர்ப்பிட்டாய்
            ஆறுமோ என் மனசு - ஓகோ
            பரபாசை அகற்றி நீ பரனைக் குருசெடுக்க
            கரமதைக் கழுவினையோ

7.         எருசலேம் வீதியில் குருசோடு சென்ற என்
            செல்வக் குமாரன் எங்கே - ஓகோ
            எருசலேம் மாதரே என் இயேசு நாதரை
            இங்கு நீர் கண்டதுண்டோ

8.         கீழ்த்திசை ராயரும் உயர்திசை சேயரும்
            சேரவே சிலுவைதனில் - ஐயோ
            பாழும் அடிமையைப் போலவே என்னேசு
            சாய்ந்துயிர் விட்டனரே

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு