1. அழகான அத்திமரம்
பசுமையான அத்திமரம்
பசியோடு இயேசு வந்தாரே
கனி தேடி அருகில் வந்தாரே
- 2
கனி
ஒன்றுமில்லை பயன் ஏதுமில்லை - (2)
அழகான அத்திமரம் காய்ந்து போனதே - (2)
2. பொலிவுள்ள
பழத்தோட்டம்
வேலியுள்ள கனித்தோட்டம்
கோபுரமும் ஆலை அமைத்தவர்
ஆவலுடன் அருகில் வந்தாரே
- 2
கனிகள்
தந்தது கசப்பான கனிகள் - (2)
தேவன் தந்த பாதுகாப்பை இழந்து போயிற்றே
- (2) - அழகான
3. கனி
தேடி வந்து விட்டார்
உந்தன் அருகில் வந்துவிட்டார்
இயேசுவை நீ ஏமாற்றிடாதே
அருமையான கனிகள் தந்திடு
- 2
ஆவியின்
கனிகள் அனைத்துமே தந்து - (2)
ஆண்டவரின் ஆசியை பெற்று மகிழ்ந்திடு -
(2) - அழகான
No comments:
Post a Comment