27 July 2018

அன்பின் உருவம் ஆண்டவர்

கன்:531

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   அன்பின் உருவம் ஆண்டவர்

                        அழைக்கிறார் நீ அருகில் வா

                        தொய்ந்துபோன உன் வாழ்வினை

                        கேட்கிறார் நீ அருகில் வா

 

                        ஓடிவா நீ ஓடிவா

                        கண் கலங்கியே நீயே வா

                        தூரமாய் நிற்கும் உன்னைத்தான்

                        அழைக்கிறார் நீ அருகில் வா

 

1.         மனிதர் பலரை நம்பினாய்

            பலமுறை தடுமாறினாய்

            உற்றார் பெற்றார் அன்பெல்லாம்

            கனவு போன்று அகலுமே

 

2.         நண்பர் பலரும் இருப்பினும்

            நாடும் அன்பைப் பெற்றாயோ

            செல்வம் எல்லாம் மாய்கையே

            உலகம் கானல் நீராமே

 

3.         ஒருமுறை அன்பை ருசித்துமே

            விழுந்துபோன நீ எழும்பி வா

            பலமுறை துரோகம் செய்ததால்

            இயேசுவின் கண்ணீர் துடைக்கவா

 

4.         இன்னும் நொந்து போவானேன்

            இன்றே அருகில் ஓடிவா

            உள்ளம் முழுவதும் உன்னையே

            தள்ளேன் என்றார் ஓடிவா

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...