27 July 2018

இந்த காலம் பொல்லாதது - உன்னை


                   இந்த காலம் பொல்லாதது - உன்னை
                        கர்த்தர் அழைக்கிறார் (2)
                        நீ வாழும் வாழ்க்கைதான்
                        அது வாடகை வீடு தான்

1.         உன்னை இரட்சிக்க உன் கூடவே இருக்கிறேன்
            என்று வாக்கு அளித்தவர்
            இன்று காத்து வருகிறார்                                   - இந்த காலம்

2.         வாலிப நாட்களில் உன் தேவனை தேடிவா
            சாத்தான் களத்தில் போரிட
            செயல் வீரராய் திகழவா                                     - இந்த காலம்

3.         பாவத்தின் சம்பளம் எரிநகரம் தான் திண்ணமே
            சத்திய தேவனின் கிருபையோ
            நித்திய ஜீவனை அருளுமே                             - இந்த காலம்

4.         காலமோ முடியுதே தேவராஜ்ஜியம் நெருங்குதே
            மனம் திரும்பி நீ வாழவே
            மன்னன் இயேசு உன்னை அழைக்கிறார்           - இந்த காலம்

5.         அல்லேலூயா பாடியே பரலோகமே சேருவாய்
            பரன் இயேசுவின் பாதத்தில்
            நல்ல பங்கினை பெற்றிடுவாய்                            - இந்த காலம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...