இறைவன் இன்று பவனி வந்தால் என்ன நடக்கும்?


                   இறைவன் இன்று பவனி வந்தால் என்ன நடக்கும்?
                        கறைபடிந்த மனுக்குலத்திற்கென்ன கிடைக்கும்?

1.         தெருக்களிலே அமைதி வரும்
            தேனும் பாலும் வழிந்தோடும்
            வருந்துவோர்க்கு வழி பிறக்கும்
            வானருளின் மடை திறக்கும்

2.         திருச்சபையின் புதுமை வரும்
            தன்னலமோ பறந்தோடும்
            சமயத்திலே மலர்ச்சி வரும்
            சாந்த குணம் எழுந்தாடும்

3.         அரசியலில் நேர்மை வரும்
            அன்பின் வழி ஆட்சி வரும்
            இமயம் முதல் குமரி வரை
            இறை அன்பின் கொடி பறக்கும்

4.         பார் முழுதும் ஒன்றுபடும்
            பிரிவினைகள் தகர்ந்தோடும்
            பாமரர்க்கு வாழ்வு வரும்
            பரமன் துணை இணைந்து வரும்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே