27 July 2018

என்றும் ஆனந்தம்


                        என்றும் ஆனந்தம்
                        என் இயேசு தருகிறார்
                        துதிப்பேன் துதிப்பேன்
                        துதித்துக் கொண்டேயிருப்பேன்
                        அல்லேலுயா ஆனந்தமே (2)

1.         உன்னதர் மறைவில் வல்லவர் நிழலில்
            என்றும் தங்குவேன்
            தேவனை நோக்கி அடைக்கலப் பாறை
            என்றே சொல்லுவேன்

2.         தமது சிறகால் என்னை மூடி
            காத்து நடத்துவார்
            அவரது வசனம் ஆவியின் பட்டயம்
            எனது கேடகம்

3.         இரவின் பயங்கரம் பகலின் அம்பு
            எதற்கும் பயமில்லை
            உன்னத தேவன் எனது அடைக்கலம்
            தங்கும் உறைவிடம்

4.         வழிகளிலெல்லாம் என்னைக் காக்க
            துதர்கள் எனக்குண்டு
            பாதம் கல்லில் மோதாமல் காத்து
            கரங்களில் ஏந்துவார்

5.         சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்
            நடந்தே செல்லுவேன்
            சாத்தானின் சகல வலிமையை வெல்ல
            அதிகாரம் எனக்குண்டு

6.         தேவனைச் சார்ந்து வாழ்கின்ற எனக்கு
            என்றும் விடுதலை
            அவரது நாமம் அறிந்த எனக்கு
            அவரே அடைக்கலம்

7.         ஆபத்து நேரம் கூப்பிடும் எனக்கு
            என்றும் பதிலுண்டு
            என்னோடு இருந்து விடுதலை கொடுத்து
            என்னை உயர்த்துவார்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...