கலிலேயா கடற்கரையோரம்


                   கலிலேயா கடற்கரையோரம்
                        ஒர் மனிதர் நடந்து சென்றார்
                        அவர்தான் இயேசு இரட்சகர்
                        உன் பாவத்தை போக்கும் உத்தமர்

1.         காரிருள் சூழ்ந்தாலும் பெருங்கவலைகள்
            தொடர்ந்தாலும் கண்ணீர் வடித்தாலும்
            பெரும் கலக்கங்கள் பிடித்தாலும்
            கர்த்தரின் குரல் உன்னை அழைக்கிறது
            உன் கவலையை மாற்றிட துடிக்கிறது

                        நெஞ்சமே நினைத்திடு அவர்
                        அன்பினை ருசித்திடு

2.         நண்பர்கள் பகைத்தாலும் - இந்த
            நானிலம் வெறுத்தாலும்
            பெற்றோர்கள் மறந்தாலும் உன்
            உற்றார்கள் பிரிந்தாலும்
            நாயகர் இயேசு உன்னை அறிந்திடுவார் - அவர்
            நன்மையினால் வழி நடத்திடுவார்                    - நெஞ்சமே

3.         ஏன் இந்த வேதனைகள்
            என்று ஏங்கிடும் மனிதர்களே
            என் இயேசுவின் போதனையை
            ஏன் இன்று மறந்தீர்களோ
            வேதனை தீர்த்திடும் வேந்தனவர் - மன
            பாரத்தை போக்கிடும் தேவனவர்                       - நெஞ்சமே

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே