09 July 2018

பாடுவேன் பரவசமாகுவேன்


          பாடுவேன் பரவசமாகுவேன்
            பறந்தோடும் இன்னலே

1.         அலை அலையாய் துன்பம் சூழ்ந்து
            நிலை கலங்கி ஆழ்த்தையில்
            அலை கடல் தடுத்து நடு வழி விடுத்து
            கடத்தியே சென்ற கர்த்தனை   - பாடுவேன்

2.         என்று மாறும் எந்தன் துயரம்
            என்றே மனமும் ஏங்கையில்
            மாராவின் கசப்பை மதுரமாக்கி
            மகிழ்வித்த மகிபனையே           - பாடுவேன்     

3.         வனாந்திரமாய் வாழ்க்கை மாறி
            பட்டினி சஞ்சலம் நேர்கையில்
            வான மன்னாவால் ஞானமாய் போஷித்த
            காணாத மன்னா இயேசுவே       - பாடுவேன்

4.         ஒன்றுமில்லா வெறுமை நிலையில்
            உதவுவாரற்றுப் போகையில்
            கன்மலை பிளந்து தண்ணீரைச் ஈந்து
            தாகம் தீர்த்த தயவை               - பாடுவேன்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...