உம் தானம் நான் அனுபித்தேன்


                   உம் தானம் நான் அனுபித்தேன்
                        உம் ஸ்நேகம் இனி மறப்பதில்லை
                        இயேசுவே எந்தன் பிரியமே
                        நீர் போதும் என் வாழ்விலே - உம் தானம்

1.         நீர் எனக்கு செய்த
            நன்மைகள் நினைக்கும்போது
            நன்றி கொண்டென் மனம் பாடிடுமே
            ஸ்தோத்திர கானத்தில் பல்லவிகள்      - உம் தானம்

2.         இயேசுவே உந்தன் அன்பை
            ஏற்க நான் தள்ளிச் சென்றேன்
            அன்று நான் அன்னியனாய் அனாதயாய் அலைந்தேன்
            இன்றோ உம் சொந்தமானேன்               - உம் தானம்

3.         என் ஜீவன் போய்விட்டாலும்
            எனக்கதின் பாரம் இல்லை
            எந்தனின் ஆத்மா நித்திய ஜீவன் பெற
            இயேசுதான் ஏற்றுக்கொண்டார்             - உம் தானம்  

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு