ஏழையை மீட்ட இயேசுவே


பல்லவி

          ஏழையை மீட்ட இயேசுவே ஸ்வாமி, அடிமை சரண் புகுந்தேன்

அனுபல்லவி

            நீசனா மென்னைத் தேடினீரோ காசினியிலன்பு கூர்ந்து - ஏழை

சரணங்கள்

1.         என் பாவம் போக்க எடுத்தீரிறைவா ஈனக் கோலமதை
            என்னதான் இதற்கீடு செய்வேன் அன்னையே விளம்புவீரே

2.         தூரமாய்க் கிடந்தே, தொல்லைகளடைந்தே தூயா உம்மை மறந்தேன்
            தூக்கினீர் எனைச் சேற்றினின்றே, தேற்றினீரும் மாவியாலே

3.         விண்ணை நீர் மறந்தீர், விரோதியாமெனையே விண்ணில் சேர்த்திடவே
            வேண்டுதல் கேளும் வேந்தனே, அருள் தேவனே சகாயனே

4.         பாவத்தின் கூலி மரணமாம், பயத்தை ஜெயித்தவர் யேசு
            ஜீவனும் சமாதானமுமீந்து, தேவனின் சமுகமீந்தார்

5.         மாயமாம் உலகின் நேசத்தை வெறுத்தேன் மன்னா உம் அன்பினாலே
            சொன்னீரே பரலோகில் சேர்ப்பதாய் உன்னதா, உம் வாக்கை நம்பி.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு