07 July 2018

தோத்திரம் செய்வோமே - இரட்சகனைத்


பல்லவி

                   தோத்திரம் செய்வோமே - இரட்சகனைத்
                        தோத்திரம் செய்வோமே (3)

அனுபல்லவி

            இப்புது மனைதனில் இறையன்பின் பிசன்னம்
            எப்போதும் நிலைகொண்டு இருந்திட கீதம் பாடி - தோத்திரம்

சரணங்கள்

1.         கையின் பிரயாசமதை - தயவாய், சுபமாய், நிறைவாய்
            கனிந்திடச் செய்தவரை
            கைவிடேன் ஒருபோதும் என்றநல் கர்த்தனை
            கைகூப்பி வணங்கிய கரத்துடன் கீதம் பாடி                 - தோத்திரம்

2.         இல்லத்தின் ஒளி அவராய் - இரந்து, தொடர்ந்து, நிறைந்த
            இன்பங்கள் நல்கிடவே
            இம்மையின் காலங்கள் யாவிலும் அவரருள்
            இவ்வடியாருடன் இருந்திட கீதம் பாடி                        - தோத்திரம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...