07 July 2018

ஆ இன்ப இல்லமே நீ என்றும்

கன்:399

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                             (மெட்டு: உம்மைத் துதிக்கிறோம்)

 

1.       ஆ இன்ப இல்லமே நீ என்றும்

            தழைத்து வாழ்க

            அன்புடன் பாலர் யாரும் அங்கு

            ஐக்கியமாய் ஓங்க

            அன்னை தந்தை

            ஆவலாய்ப் பாலகரை

            ஆண்டவன் பாதம் படைக்க

 

2.         ஆ இன்ப இல்லமே உன் செல்வம்

            சுகம் தழைக்க;

            உன் மக்கள் யாவரும் ஓர் வேலை

            உகந்து செய்ய

            பக்தியுடன்

            பற்பல சேவை ஆற்றி

            கர்த்தன் அருள் பெற்று ஓங்க

 

3.         ஆ இன்ப இல்லமே உன்

            உண்மை நண்பர் கிறிஸ்தேசு

            அன்பர் அவர் பிரசன்னம்

            உன்னை என்றும் நடத்தும்

            இவ்வாழ்வின் பின்

            உன் மக்களை அவரே

            விண்ணோடு சேர்த்துக் காப்பாரே

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...