07 July 2018

பாவத்தின் பாரத்தினால் தவித்திடும்

பாவத்தின் பாரத்தினால் தவித்திடும் பாவி என்னை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

1.       பாவத்தின் பாரத்தினால் தவித்திடும் பாவி என்னை

            நின் கிருபை பிரவாகத்தால் ஏற்றிடும் இயேசுநாதா

 

2.         கெட்ட குமாரனைப் போல் துஷ்டன் நான் அலைந்தேனப்பா

            நின் அன்பை உணராமல் துரோகம் நான் செய்தேனே

 

3.         தந்தையை விட்ட பின்பு தவிடுதான் ஆகாரமோ

            மனங்கசிந்து நொந்தேன் கண்ணீரைத் துடைத்திடுமே

 

4.         கள்ளானாயினும் நான் நீ பெற்ற பிள்ளையல்லோ

            கள்ளனுக்கருள் செய்த நீ தள்ளாதே சிலுவை நாதா

 

5.         தாய் தந்தை தமரெல்லாம் என்னைக் கைவிடுவார்கள்

            சாகும் நாளென்னைத் தாங்குவார் நீரல்லால் யாருமில்லை

 

6.         பாவி மரியாளையும் நன்றியற்ற பேதுருவையும்

            அருள் செய்த ஆண்டவனே கிருபை கூர் ஐயனே

 

7.         உம்மோடு வருடங்களாய் உணவுண்ட யூதாசைப் போல்

            கரையற்ற தந்தை உம்மை வஞ்சித்தேன் ஏசுநாதா!    

 

8.         அறையுண்ட சிலுவையினின்று அணைத்திட வாருமையா

            நின் பாதம் வீழ்ந்தேனையா சமாதானம் தாருமையா

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...