பாவியே நீ போகும் போது கூட


பல்லவி

                   பாவியே நீ போகும் போது கூட வருவதென்ன?
                        கூட வருவதென்ன? கொண்டு நீ வந்ததென்ன?

1.         ஆடு மாடு நன்செய் புன்செய் வீடுவாசல் தான் வருமோ?
            பாடுபட்டு லாயக்காய் தேடும் பணம் வருமோ?                             - பாவி

2.         உத்தியோக மதிப்புகளும் பி.ஏ., எம்.ஏ. பட்டங்களும்
            மெத்தவே அரையில் கட்டும் ஆடைகளும் வருமோ?               - பாவி

3.         மாயை மாயை மாயை என்று சொல்லுகிறான் பிரசங்கி
            ஞாயமாய்த் தீர்ப்பு செய்தார் ஞானி சாலமோன் தானே                - பாவி

4.         தேடு நீ கண்டடைவாய் தட்டுத் திறப்பேனென்றார்
            கேளு கொடுப்பேனென்றார் கேட்டவரம் தருவார்                        - பாவி

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு