இந்த மங்களம் செழிக்கவே
பல்லவி
இந்த மங்களம்
செழிக்கவே - கிருபை செய்யும்
எங்கள் திரித்துவ தேவனே!
அனுபல்லவி
சுந்தரக் கானாவின் மணப் பந்தலில் சென்றம்
மணத்தைக்
கந்தரசமாகச் செய்த விந்தை போல், இங்கேயும்
வந்து. - இந்த
சரணங்கள்
1. ஆதிதொடுத் தன்பை எடுத்தாய், மானிடா்தமை
ஆணும் பெண்ணுமாகப் படைத்தாய்
நீதி வரம் நாலுங்கெடுத்தாய் – பெற்றுப்
பெறுகி
நிற்க உலகத்தில் விடுத்தாய்
மாதவா் பணியும் வேத போதனே அந்தப்படி உன்
ஆதரவைக் கொண்டு அதன் நீதியை நம்பிப்புரிந்த
- இந்த
2. தக்க ஆபிராமும் விண்டனன் - அதனை மன
துக்குள் எலியேசா் கொண்டனன்
முக்கிய ஆரன் நிலத்தண்டினன்; - நினைத்தபடி
சக்கிமதாகக் கண்டனன்
பக்குவம் உரைத்திடா ரெபேக்காளும் ஈசாக்குவுக்கு
தக்க மணவாளியாகத் தந்து தயை செய்தாற் போல. - இந்த
3. சத்திய வேதத்தின் வாசனே - அருளுபரி
சுத்த சுவிசேட நேசனே
பக்தர்கள் பவ விமோசனே - பழுதணுவும்
அற்ற கிறிஸ்தேசுராசனே
வெற்றியால் யாக்கோபுவுக்கு முற்றிலும்
அளித்த பேறாய்ப்
புத்திர சம்பத்துண்டாக்கி நித்ய சுபசோபனமாய். - இந்த
Comments
Post a Comment