07 July 2018

இம்மணர்க் குன்னருள் ஈயும்


பல்லவி

          இம்மணர்க் குன்னருள் ஈயும் பர வாசா!
            ஏசுக் கிறிஸ்தையா, ஓ! சருவேசா!

சரணங்கள்

1.         செம்மையும் நன்மையும் செல்வமும் தாரும்
            தேவரீர் இவ்வீரு பேரையும் காரும்.                   -இம்

2.         ஆதாமோ டேவையை அன்றமைத்தீரே
            அவ்விதமாக நீர் இன்றும் செய்வீரே.                  -இம்

3.         அன்பன் ஈசாக்கு ரெபேக்காட் கிரங்கி
            ஆபிரகாமுடன் சாராளைக் காத்தீர்.                 -இம்

4.         உந்தயை பெற்றிவர் ஓங்கிப் பெருகவும்
            ஓருவர்க்கொருவர் நல்லன்பில் நிலைக்கவும்.    -இம்

5.         தாழ்மை பொறுமைகள் சற்குண மேன்மைகள்
            தந்தும தாவியைக் கொண்டு காத்தாளுமேன்.   -இம்

6.         இயேசு கிறிஸ்துவை நேசித்து வாழவும்
            இன்ப விசுவாச வீட்டார் என்றாகவும்.                -இம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...