07 July 2018

யேசு நாயகா, வந்தாளும்


பல்லவி

          யேசு நாயகா, வந்தாளும் - எந்நாளும் திவ்ய
            யேசு நாயகா, வந்தாளும்

அனுபல்லவி

            ஆசீர்வாதமாக இந்த நேச மணமே நன்றாக     - யேசு

சரணங்கள்

1.         சுந்தரம் மிகும்படி முன் அந்த மணவீட்டில்
            உந்தன் அருள் தந்த தயை போல அன்பாலே    - யேசு

2.         உத்தம சன்மார்க்க நெறி, பக்தி, விசுவாசம்
            நித்திய சமாதானம் உற்று, வாழ, மிகவாழ         - யேசு

3.         துங்கம் மிகு நன்கனம் விளங்கி, வளமாக
            மங்களம ஓங்க, நலம் தாங்க                             - யேசு

4.         நித்திய சுபசோபனமோ டெத்திசையினும் பெருகப்
            புத்திர சந்தானமே செழிக்க தழைக்க               - யேசு

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...