07 July 2018

ரோஜாப்பூ வாசமலர்கள் நாம் இப்போ


பல்லவி

                   ரோஜாப்பூ வாசமலர்கள் நாம் இப்போ
                        நேச மணாளர் மேல் தூவிடுவோம்

சரணங்கள்

1.         மல்லிகை முல்லை சிவந்தி பிச்சி
            மெல்லியர் சேர்ந்து அள்ளியே வீசி
            நல் மணமக்கள் மீது நாம்
            எல்லா மலரும் தூவிடுவோம்                 - ரோஜாப்பூ

2.         மன்னனாம்........................... மணமகளோடு
            அன்றிலும் பேடும்போல் ஒன்றித்துவாழ
            ஆண்டவர் ஆசீர்வதிக்க நம்
            வேண்டுதலோடு தூவிடுவோம்.             - ரோஜாப்பூ

3.         மணமகள் ................. இணைபிரியாது
            மணமகன் மீது மிக அன்புகூர்ந்து
            மனைவிக் கழகு தருங்குணம் யாவும்
            பெற்றி இலங்கிடத் தூவிடுவோம்          - ரோஜாப்பூ

4.         புத்திர பாக்கியம் புகழும் நல் வாழ்வும்
            சத்தியம் சாந்தம் சுத்த நல் இதயம்
            நித்திய ஜீவனும் பெற்றிவ ரென்றும்
            பக்தியாய் வாழ்ந்திடத் தூவிடுவோம்     - ரோஜாப்பூ

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...