09 July 2018

உம்மோடு இருக்கணுமே - இயேசு


                   உம்மோடு இருக்கணுமே - இயேசு
                        உம்மைப்போல் மாறணுமே
                        உலகின் ஒளியாய் மலைமேல் அமர்ந்து
                        வெளிச்சம் கொடுக்கணுமே - நான்

சரணங்கள்

1.         ஓடும் நதியின் ஓரம் வளரும்
            மரமாய் மாறணுமே
            எல்லா நாளும் இலைகளோடு
            கனிகள் கொடுக்கணுமே - நான்

2.         உலகப் பெருமை இன்பமெல்லாம்
            குப்பையாய் மாறணுமே
            உம்மையே என் கண்முன் வைத்து
            ஓடி ஜெயிக்கணுமே - நான்

3.         வார்த்தை என்னும் வாளையேந்தி
            யுத்தம் செய்யணுமே
            விசுவாசம் என்னும் கேடகத்தால்
            பிசாசை வெல்லணுமே - நான்

3.         ஆத்ம பார உருக்கத்தோடு
            அழுது புலம்பணுமே
            இரவும் பகலும் விழித்து ஜெபிக்கும்
            மேய்ப்பனாகணுமே - நான்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...