என்னைத் தேடி இயேசு வந்தார்


                        என்னைத் தேடி இயேசு வந்தார்
                        எந்தன் வாழ்வை மாற்றி விட்டார் (2)
                        அல்லேலுயா நான் பாடுவேன்
                        ஆடிப்பாடித் துதித்திடுவேன் - என்னை

1.         தேர்ந்து கொண்டார் என்னைத்
            தெரிந்து கொண்டார்
            பரிசுத்தனும் புனிதனுமாய்
            அவர் திருமுன் வாழ                 - என்னை

2.         மகனானேன் நான்
            மகளானேன்
            அப்பா பிதாவே என்றழைக்கும்
            உரிமையை எனக்குத் தந்தார்  - என்னை

3.         ஆவி தந்தார் - தூய
            ஆவி தந்தார்
            வல்லமையும் அன்பும் ஞானமும் கொண்ட
            பரிசுத்த ஆவி தந்தார்             - என்னை

4.         சுகமானேன் நான்
            சுகமானேன்
            இயேசு கிறிஸ்துவின் காயங்களால்
            சுகமானேன் சுகமானேன்            - என்னை

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே