09 July 2018

எப்படி பாடுவேன் நான் - என்


                        எப்படி பாடுவேன் நான் - என்
                        இயேசு எனக்குச் செய்ததை
                        ஆயுள் முழுவதும் என் கர்த்தருக்காய்
                        ஆத்தும ஆதாயம் செய்வேன் (2)

1.         ஒரு வழி அடையும் போது
            புது வழி திறந்த தேவா
            திறந்த வாசலை என் வாழ்க்கையில்
            அடைக்காத ஆண்டவரல்லோ - 2

2.         எப்பக்கம் நெருக்கப்பட்டும்
            ஒடுங்கி நான் போவதில்லை
            அப்பனின் மார்பினில் சாய்ந்தென்றுமே
            எப்போதும் பாடிடுவேன் - 2

3.         கடந்து வந்த பாதையில்
            கண்மணி போல் காத்திட்டீர்
            கடுகளவும் குறை வைக்காமலே
            அதிகமாய் ஆசிர்வதித்தீர் - 2

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...