09 July 2018

பாவம் என்னைத் தொடர்ந்தாலும்


                   பாவம் என்னைத் தொடர்ந்தாலும் - இயேசு
                        தேவா, உம்மை மறவேனே

1.         செய் பாவம் நினைத்து நான் அழுகின்றேன் - அதை
            செய்யாமல் இருந்திட பலமுமில்லை
            மெய்யாக உம் துணை வேண்டுமய்யா - எந்தன்
            அய்யா நின் பிள்ளை நானல்லவோ                    - பாவம்

2.         உள்ளத்தில் நல்லலெண்ணம் பல உண்டு - ஆனால்
            வெள்ளத்தில் அடிபட்டுச் செல்லுகின்றேன்
            உள்ளதை உம்மிடம் சொல்லிவிட்டேன் - எந்தன்
            உடலையே உமக்கென தந்துவிட்டேன் - பாவம்

3.         மன்னவா உம்மிடம் ஓடி வந்தேன் - பாவ
            மன்னிப்பு உண்டென நம்பி வந்தேன்
            மன்னிப்பு வழங்கினால் போதாது - என்னை
            மாற்றாமல் போய்விடில் வாழ்வேது                     - பாவம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...