09 July 2018

பாவி பரமசுதன் தாவி உனைத் தயவாய்


பல்லவி

                   பாவி பரமசுதன் தாவி உனைத் தயவாய்
                        கூவி அழைக்கிறாரே பாராயோ - ஓ

அனுபல்லவி

                        பூவின் பாவப் பாரத்தை மேவிச் சுமந்து தீர்த்த
                        தேவாட்டுக்குட்டி இதோ பாராயோ        - ஓ பாவி

சரணங்கள்

1.         ஜென்மப் பாவத்தினோடு கன்மப் பாவமுமுன்னை
            சின்னப் படுத்துவதைப் பார் பார் பார் - உனின்
            நன்மை ஏதுமில்லாத தன்மையதை அறிந்து
            நன் மணவாளனேசைச் சேர் சேர் சேர்                - ஓ பாவி

2.         சிற்றொளி தீபம் சுற்றிப் பரந்து நிற்கும்
            சிற்றுயிர் புட்கள் தனைப் போலவே - உனைச்
            சுற்றி உலகளிக்கும் சிற்றின்பமான சுகம்
            தொற்றிப் பாவி நீ சேராயோ?                             - ஓ பாவி

3.         எத்தனை தான தர்மம் நித்தம் செய் பூசை பலி
            அத்தனையாலும் பாவம் தீராதே - பரி
            சுத்தன் இயேசுவின் திரு ரத்தம் பாவக் கறையை
            சுத்திகரித்திடும் நீ சேராயோ?                          - ஓ பாவி

4.         தந்தை தேவன் தமது சொந்தக் குமாரன் தனைத்
            தந்து உலகில் தயை புரிந்தாரே - நீயும்
            சொந்த சேயனாகவே உந்தன் விசுவாசத்தால்
            சொந்தம் உண்டாகுமென்று பகர்ந்தாரே            - ஓ பாவி

5.         நீடிய பாவ மன்னிப்போடு மெய்ப் பரிசுத்தம்
            நித்திய ஜீவனுமுன் பங்காமே - இன்பம்
            நாடி ஜீவ கிரீடம் சூடிப் பராபரனைப்
            பாடி மகிழ்வதும் உன் பங்காமே             - ஓ பாவி

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...