அனுதினமும் உம்மில் நான் வளர்ந்திடவே


                   அனுதினமும் உம்மில் நான் வளர்ந்திடவே
                        உம் அனுக்கிரகம் தரவேண்டுமே
                        என்னால் ஒன்றும் கூடாதையா
                        எல்லாம் உம்மால் கூடும்

1.         என் ஞானம் கல்வி செல்வங்கள் யாவும்
            ஒன்றுமில்லை குப்பை என்றெண்ணுகிறேன்
            என் நீதி நியாயம் அழுக்கான கந்தை
            என்றே உணர்ந்தேன் என் இயேசுவே    

2.         அழைத்தவரே உன்னில் பிழைத்திடவே
            அவனியில் உமக்காய் உழைத்திடவே
            அர்ப்பணிக்கின்றேன் என்னை இன்று
            ஏற்றுக் கொள்ளும் என் இயேசுவே

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே