07 July 2018

அந்தோ சிலுவைப் பவனி பார்

கன்:403

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Youtube Link

 

Text file Download

 

 

 

 

                             சரணங்கள்

 

1.       அந்தோ சிலுவைப் பவனி பார் - நமது

            ஆண்டவர் படுந்துயர் ஆறுமோ - நாம்

            அழுதாலுந்தான் தீருமோ - குரு

            சன்றி மீட்பு ஒப்பேறுமா - சகி சகி

 

2.         தோளில் பாரம் அழுந்தவே - அவர்

            தேய்ந்து கீழே விழுகிறார் - ஐயோ

            தூக்கிவிடுவார் இல்லையோ - மா

            தோஷி என்னால் இத்தொல்லையோ - சகி சகி

 

3.         தூக்கென்றவரை அதட்டுறான் - ஒரு

            தோஷி முறுக்கிப் பிதற்றுறான் - அங்கே          

            துடுக்காய் சவுக்கை சுழற்றுறான் - ஒருவன்

            தொந்தரை செய்தே அலட்டுறான் - சகி சகி

 

4.         மெல்ல இயேசு நடக்கிறார் - வேர்த்து

            மெய் சோர்ந் துடைந்து சடைக்கிறார் - தம்மைப்

            பலியாய் விருப்புடன் படைக்கிறார் - எந்தன்

            பாவக் கடன்களை அடைக்கிறார் - சகி சகி

 

5.         மாதா ஏங்கித் தேம்புறாள் - நன்மை

            வாங்கினோர் புலம்பி ஏங்குறார் - சீமோன்

            மதிசோர்ந்து குருசைத் தாங்குறான் - ஐயோ

            மருகி யோவான் முகம் வீங்குறான் - சகி சகி

 

6.         கல்வாரி மலையில் ஏறுகிறார் - மெய்

            கருகி அன்பர் சோர்கிறார் - சாலேம்

            மாதர் புலம்பி அழுகிறார் - அவர்க்

            காறுதல் மொழிகள் கூறுகிறார் - சகி சகி

 

7.         சோலையில் வந்த பாவத்தால் இயேசு

            சாலையின் வழியே போகிறார் - அலங்

            கோலமாகி என்னால் சாகிறார் - தேவ

            கோபாக்கினையில் வேகிறார் - சகி சகி

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...